யாழ் நகரில் இடம்பெற்ற தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு!

யாழ் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் நிதித்திட்டமிடல் அமைச்சின் அனுசரணையுடன் மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு கருத்தரங்கு ஒன்று இன்று (11) யாழ் மாவட்டத்தில் நடைபெற்றது.

JPG_1215

யாழ் மாவட்ட வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் தலைவர் கே.விக்னேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாவட்டத்திலுள் பெரும் எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இக்கருத்தரங்கு ஒரு நாள் அமர்வாக இடம்பெற்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கிடையில் தொழில் முயற்சி தொடர்பான திறன்கள் மற்றும் வியாபரம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யும் நோக்கிலும் நிதி முகாமைத்துவம் , அடிப்படை கணக்கியல் மற்றும் நிதி அறிக்கைகளை பேணுதலின் முக்கியத்துங்கள் தொடர்பாக விசேடமான வளவாளர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

நிதி அமைச்சின் பிரதிநிதி சமத் அபேசிங்க, மற்றும் மற்றும் உதவி பொதுச்செயலாளர் சந்திரத்ன டி விதானகே, உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்

Related Posts