யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (27) யாப்பாணம் கலாச்சார மண்டபத்திற்கு வருகை தந்து பேச்சு நடத்தினார். இதில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து யாழ்.மாநகர சபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்..
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த மண்டபத்தில் ஒரு பகுதியில் தொழில்நுட்ப வளாகத்தை உருவாக்க ஒரு இடத்தை ஒதுக்கி தரமுடியுமா என கோரியிருந்தார் அதற்கு ஆராய்ந்து இடம் ஒதுக்கிதரமுடியும் என்றால் அதற்கான இடத்தை தருவதாக கூறியதாக தெரிவித்தார். அத்துடன் இதன்பராமரிப்பு யாழ்.மாநகர சபையிடமே இருக்க வேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தாக கூறினார் . இதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த கட்ட தொகுதி கட்டுமானம் முடிந்தும் ஒருவருடமாக மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படாமல் உள்ளது. இதனை மக்கள் பாவனைக்காக திறப்பதற்கு இந்திய அரசு மற்றும் இலங்கை அரசும் உடனடியாக செயற்படவேண்டும் என மாநகர முதல்வர் கோரினார். மாநகர சபை பராமரிக்க தன்னுடைய முழுமையான பணியை நிறைவேற்றியுள்ளது கட்டடத்தை பொறுப்பேற்று பராமரிக்க எனவே இதனை விரைவாக திறந்து தம்மிடம் தருமாறு கோரியதாக தெரிவித்தார். இதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த கட்டத்தை பெரியதொரு நிகழ்வாக இருநாட்டு அரசும் இணைந்து திறந்து வைக்க விரும்புவதாக தெரிவித்தார். கொவிட் காரணமாக தாமதித்தாலும் முதலே மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பதற்கும் ஆராய்ந்துவருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதில் யாழ்.இந்திய துணைத்தூதுவரும் இதுபற்றி பேசி இணக்கம் ஒன்றினைக் கண்டுள்ளனர்.
அத்துடன் யாழ். மாநகர சபைக்குள் செய்யவேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் குறித்து எழுத்துமூலமாக அமைச்சரிடம் கொடுத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.