யாழ்.நகரின் சில பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம் தடை!

pipeஆரியகுளம் சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் யாழ்.மாநகர சபையின் நீர் விநியோகக்குழாய் சேதமடைந்த மையினால் நகரின் சில பகுதிகளுக்குக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு மேலாகவுள்ள இந்த விநியோகக் குழாய் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் “காப்பெற்’ போடும் பணியின் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது. “காப்பெற்’ வீதி அமைப்பதற்காக இயந்திரங்களைக் கொண்டு வீதி தோண்டப்பட்ட போது 20 அடி நீளம் வரை விநியோகக் குழாய்கள் சேதமடைந்துள்ளன.

குழாய்கள் உடைந்தவுடன் இரவு முழுவதும் பெய்த மழையினால் இந்தப்பகுதி வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. குழாய் அமைந்துள்ள பகுதியில் வெள்ளத்தை நீரிறைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதனையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சேதமடைந்த குழாய்களுக்குப் பதிலாக புதிய குழாய்களைப் பொருத்தும் முயற்சியில் மாநகரசபை நீர் வேலைப் பகுதி பொறியியல் பிரிவு ஈடுபட்டுள்ளது. இன்று புதன்கிழமை பிற்பகலில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts