யாழ். நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடு மந்தகதியில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையிலிருந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட யாழ்ப்பாண நகர்ப் பகுதி சுத்தம் செய்யப்பட்டதோடு கழிவகற்றும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் குறித்த பணிகளை மேற்பார்வை செய்திருந்தார்.

Related Posts