யாழ். நகரப் பகுதியில் அநாமதேய சுவரொட்டிகள்

இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஐந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது’ இவ்வாறு யாழில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அநாமதய சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
notes-jaffna
இச் சுவரொட்டிகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தும் மாணவத்தோழர்களுக்கு…

‘இன்று ஈழம் இன அழிப்பின் உச்சகட்ட கொடுமைகளை அனுபவிக்கிறன்து. ஐந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்று முழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது.

நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இன அழிப்பு வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்..

திருமணத்துக்கு கூட இராணுவத்திற்கு முதல் மரியாதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் அழுவது போல் அழு என்பது போல சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கை கோர்க்கிறது.

இங்கு தினம் தினம் இசை பிரியாக்களும் பாலசந்திரனும் புதைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை..

போராட இடம்கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்த உறவுகளே. லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லூரிகள் அனைத்தினுள்ளும் பரப்புங்கள்.

அன்று மாவீரர் முத்துகுமாரன் எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள். சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள் ஏமாந்து போய் விடாதீர்கள்’

மாணவர் சக்தி மாபெரும் சக்தி

அடக்கப்பட்ட சமூகங்களிற்கான தமிழ் பிரதிநிதிகள்

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts