யாழ். நகரத்தில் அல்லற்படும் பாதசாரிகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் முன் வீதியில் உள்ள பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதியில் மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு உள்ளமையால் குறித்த நடைபதையில் பாதசாரிகள் நடந்து செல்லது சிரமமாக உள்ளது. குறிப்பாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் ,முதியவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

மேலும், மின்கம்பம் நடுவதற்கு என தோண்டப்பட்டுள்ள கிடங்கு மூடப்படாமையால் ஆபத்தான நிலைமையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

வீதிஅபிவிருத்தி சபை, மின்சராசபை,,நகரசபை, போன்ற சபைகளோ அல்லது வைத்தியசாலை வட்டாரங்களோ இதனை கண்டுகொள்ளவில்லை என பாதசாரிகள் விசனம் தெரிவித்தனர்.

hospital-road-denger

Related Posts