யாழ். தொண்டர் ஆசிரியர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் சந்திப்பு

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்து அடுத்த மாதம் ஜனாதிபதியுடன் சந்தித்த கலந்துரையாடவுள்ளதாக யாழ். தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

நிரந்தர நியமனம் குறித்து கல்வி அமைச்சுடன் பல்வேறு போராட்டங்களை நடாத்தி தோல்வி கண்ட நிலையில், ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடவுள்தாக சங்கத்தினர் கூறினர்.

யாழ். மாவட்டத்தில் 107 தொண்டர் ஆசிரியர்கள் தொழில்நுட்பம் மற்றும் வேறுதுறைகளில் பட்டப்படிப்பு முடித்து தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடுவதனூடாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் மேலும் கூறினர்.

Related Posts