யாழ் தேவி பரீட்சார்த்த ரயில் விபத்தில் ஒருவர் கிளிநொச்சியில் மரணம்!

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கான யாழ்தேவி ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts