யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு கட்சியினரின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் யாழிலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பெருமளவலானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts