யாழ். துப்பாக்கிச்சூடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் மஹிந்த!

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு என்பதனை சிந்தித்து பார்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாண துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்ற போதிலும் இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதென மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts