இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல சராசரியாக நான்கு பிரதான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் யாழ்தேவி ரயில் சேவைகள் கல்கிஸ்சை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.
மேலும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடுகதி மற்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இவை யாழில் இருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும்.
அத்துடன் கொழும்பில் இருந்து யாழ் வரை செல்ல சாதாரண ரயில் கட்டணமாக 320 ரூபா அறவிடப்படவுள்ளது.
மேலும் முதல் வகுப்பு ஆசனங்களுக்கு 900 ரூபாவும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கு 800 ரூபாவும், அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைக் கட்டணமாக 1500 ரூபா அறவிடப்படவுள்ளது.
அதேபோல் எதிர்வரும் தினங்களில் மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் வரை, பிரதி சனிக்கிழமைகள் ரயில் சேவை இடம்பெறவுள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
யாழ். வந்தடைந்தது யாழ்தேவி , நேரடி ஒளிபரப்பு !