யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 9 பேர் இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தையொட்டி திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
8 ஆண்களும் ஒரு பெண்ணும் யாழ். சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
65ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் முகமாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டம் செலுத்த முடியாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 130 கைதிகளும் பூஸா சிறைச்சாலையிலிருந்து 140 கைதிகளும் யாழ். சிறைச்சாலையிலிருந்து 9 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஏ.சி.பெரேரா தெரிவித்தார்.