யாழ்.சிறுவர் பூங்காவிற்கு முன்னால் மாநகரசபையால் கழிவுகள் போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிற தொட்டிகளைச்சுற்றிலும் கடதாசி மற்றும் பிளாஸ்ரிக் குப்பைகள் சிந்தப்பட்டும், கொட்டப்பட்டுமுள்ளன இதனால் பூங்காவிற்கு வருகின்ற தமது பிள்ளைகளுக்கு டெங்கு பரவும் அபாயமுள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
யாழின் முக்கியமான இடமாக விளங்கும் இவ்விடத்தின் அருகாமையில் யாழ்மாவட்டச் செயலகம், ஆளுநர் செயலகம், யாழ்.பிரதேச செயலகம் மற்றும் இந்த சிறுவர் பூங்கா போன்றன அமைந்துள்ளன இவற்றிக்கு அடிக்கடி மக்கள் வந்து செல்கின்றமை அதிகம் எனவே சிறுவர் பூங்காவிற்கு அருகில் மாநகர சபையினால் கழிவுகள் போடும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும் மக்களினால் பொறுப்பற்ற முறையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாநகரசபை அதிகாரிகளிடம் பலமுறை தொிவித்த போதும் அவா்கள் கண்டுகொள்ளவேயில்லை. அத்துடன் வீடுவீடாகச் சென்று டெங்கு பெருக்கம் பார்த்து குற்றம் கண்டுபிடித்து பணம் வசூலிக்கும் சுகாதார அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக ஏன் கவனத்தில் எடுப்பதில்லை? டெங்குவின் தாக்கம் தற்பொழுது யாழில் மோசமாக உள்ளது.
இந்நிலையில் மாலை நேரங்களில் அதிகமான பிள்ளைகள் மற்றம் பெற்றோர்கள் இப்பூங்காவிற்கு வந்து செல்வது வழமை இந்த மோசமான செயற்பாடு அவர்களுக்கு அச்சத்தை எற்படுத்தியுள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்