யாழ். சாலையில் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன

யாழ். பஸ் சாலைக்கு வழங்கப்பட்ட 10 புதிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

CTB-buss

கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். பஸ் சாலைக்கு 10 பஸ்களை வழங்கியிருந்தார்.

10 பஸ்களில் பழைய பஸ்களுக்கு பதிலாக அதாவது யாழ்ப்பாணம் கொழும்புக்கு 2, யாழ்ப்பாணம் கண்டிக்கு 2 பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், புதிய சேவையாக குறிகட்டுவான் – கொழும்புக்கு 2 பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன், ஏற்கனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள திருகோணமலை – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – விடத்தல்பளை, யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் ஆகிய இடங்களிற்கு மேலதிகமாக தலா 1 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts