யாழ். சாலைக்கு மேலும் 5 புதிய பேரூந்துகள்

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலைக்கென மேலும் 5 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

ctb

இதற்கான நிகழ்வுகள் நேற்று கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ். சாலையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த 5 பேருந்துகளும் யாழ். சாலை முகாமையாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இது குறித்து சாலை முகாமையாளர் தெரிவிக்கையில்,

இன்று எமக்கு வழங்கப்பட்ட 5 பேருந்துகளும் இன்றிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அந்தவகையில் குறித்த பேருந்துகளில் 2 அக்கரைப்பற்றுக்கும், ஏனையவை கண்டி , திருகோணமலை மற்றும் பொத்துவிலுக்கும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும் 5 பேருந்துகள் எமக்கு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ். சாலைக்கு பேருந்துகள் தேவையாக உள்ளன. அவற்றை முழுமையாக நிவர்த்தி செய்தால் மட்டுமே யாழ். குடா உட்பட வெளிமாவட்டங்களுக்கும் சீரான சேவையினை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த போது யாழ். சாலை உட்பட வடக்கில் உள்ள 7 சாலைகளுக்கும் என தலா 10 பேருந்துகள் வீதம் 70 பேருந்துகள் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts