யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவிற்கான காரியாலயம் திறந்து வைப்பு

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணி வகுப்பு நிகழ்வு இன்று சனிக்கிழநைடைபெற்றது.கோப்பாய் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா கலந்துகொண்டார். 
koppay_police_001
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் பரீசீலனை செய்யப்பட்டதுடன், நடமாடும் பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் என்பன சோதனை செய்யப்பட்டன.

சிறுவர் பெண்கள் பிரிவிற்கான காரியாலயத்தினை யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பொது மக்களுக்கான தொடர்பாடல் மண்டபத்தில் தொலைக்காட்சி ஒன்றையும் ஆரம்பித்து வைத்தார்.

வருடாந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ‘கோப்பாய் பொலிஸ்’ என அடையாளமிடப்பட்ட குடைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Related Posts