யாழ் – கொழும்பு சேவையில் மற்றுமொரு ரயில்

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலும் ஒரு ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

mail train

குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களில் அதிகளவான பயணிகள் பயணிப்பதே இதற்குக் காரணம் என ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14ம் திகதி முதல் இரவு ரயில் ஒன்று சேவையை மேற்கொள்ளவுள்ளது.

இரவு 10.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த ரயில் காலை 06.55 அளவில் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

மேலும் இரவு 08.40க்கு யாழில் இருந்து பயணத்தை மேற்கொண்டு காலை 05.30க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts