யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

mail train

இந்த மேலதிக ரயில் சேவையானது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளிலும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.40 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ரயில் சேவை, மாலை 5.30 மணிக்கு கொழும்பை அடையும்.

யாழ்ப்பாணத்திலிருந்து செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை,ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் இரவு 8.40க்கு புறப்படும் ரயில் சேவை அதிகாலை 5.30 மணிக்கு கோட்டையை சென்றடையும் .

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான சேவை, நாளை வெள்ளிக்கிழமை (14) முதல் ஆரம்பிக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவை ஞாயிற்றுக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கும் என புகையிரத நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Posts