யாழ்.கொட்டடிப் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு இராணுவம் மிரட்டல்

யாழ். கடற்கரையோரங்களில் உள்ள பகுதிகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், யாழ். கொட்டடிப் பகுதியிலும் தமது கைவரிசையைத் தொடங்கியுள்ளனர்.

1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் குப்பைமேடு என்று அழைக்கப்பட்ட யாழ். கொட்டடி கடற்கரையோரம் தற்போது சுமார் 30 வரையான குடும்பங்கள் வசித்துவரும் குட்டிக் கிராமமாக விளங்குகின்றது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களை எழுப்பி அங்கு இராணுவப் படைமுகாம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆதுவும் கைகூடாமற் போனது.

தற்போது யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள கரையோரங்களை இராணுவத்தினரும், கடற்படையினரும் கைப்பற்றி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக கொட்டடி கரையோரத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களிற்குச் செல்லுமாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனை மக்கள் பொருட்படுத்தாமல் இங்கேயே இருப்பதால் கோபமடைந்த இராணுவத்தினர் புள்டோசர் கொண்டு வந்து குடியிருப்புகளை இடித்துத் தள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் அங்கிருக்கும் குடும்பங்கள் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் அநாதரவாக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

Related Posts