யாழ். கே.கே.எஸ் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த ஓராண்டு காலமாக காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்பு பணிகளின் காரணமாக இந்த வீதியால் பயணம் செய்யும் வாகனங்களும் பொது மக்களும் பாடசாலை மாணவாகளும் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் தொடர்ந்து அந் நிலையே காண்படகிறது.

வீதியின் இருமருங்கும் கிளறப்பட்டு கிறவல் போடப்பட்டமையாலும் வீதியின் மையப் பகுதயில் உள்ள வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதினாலும் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிய நிலைமை தொடர் கதையாகவே இருந்துவந்துள்ளது.

ஓராண்டு நிறைவடையும் நிலையிலேனும் பொது மக்களுக்கு நம்பிக்கையேற்படும் வகையில் சுமார் இருநூறு மீற்றர் தூரம் வரையேனும் ஒரு பகுதிக்கு காப்பெற் போட முனைந்துள்ளமை பொது மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts