யாழ். குருநகர் பகுதியில் 10 ஆமைகள் மீட்பு

durtles_amaiயாழ். குருநகர் கடற்கரைப்பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 10 ஆமைகளை யாழ். பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குருநகர் கடற்கரை 3ஆம் குறுக்கு வீதியில் சோதனையிட்ட போது, அப்பகுதி வீட்டில் இருந்து 10 ஆமைகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட ஆமைகளை யாழ். நீதிவானின் வாசஸ்தலத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்றும் யாழ். பொலிஸார் கூறினர்.

ஆமைகளை வைத்திருந்த நபர் தலைமறைவாகியுள்ளதால் கைதுசெய்ய முடியவில்லை என்றும் அவரை நாளை காலைக்குள் கைதுசெய்வோம் எனவும் யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts