யாழ்.குடாவில் 13,100 இராணுவ வீரர்களே கடமையில் ; முதுமையில் உளறுகிறார் சம்பந்தன் எம்.பி

Mahintha-hathturusinga-armyதேர்தலில் வங்குரோத்து அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேடும் முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க மேலும் கூறியதாவது:

சுமார் 13,100 இராணுவத்தினரே யாழ்ப்பாணத்தில் தற்பொழுது நிலை கொண்டுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க, யாழில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்திருப்பது, முதுமையில் அவர் உளறுகின்றார் என்பது புலப்படுகிறது எனக் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் மொத்தத் தொகை சுமார் ஒரு இலட் சத்து 85 ஆயிரம் ஆகும். இந்நிலையில் சம்பந்தன் ஐயா யாழ். குடாநாட்டில் மாத்திரம் ஒன்றரை இலட்சம் இராணுவம் நிலை கொண்டுள்ளனர் என்று கூறுவது வயது காரணமாக கணக்கு தெரியாமல் தடுமாறுவதை காண்பிக்கிறது என்பதையே என்னால் திட்டவட்டமாக கூற முடியும் என்றார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த 2008 ஆம் ஆண்டு 43 ஆயிரம் இராணு வத்தினர் யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு அது 26,200 ஆக குறைக்கப்பட்டது. தற்பொழுது அது 13 ஆயிரத்து 100 ஆக காணப்படுகிறது.

தேவையை கருத்திற்கொண்டு படிப்படியாக இராணுவத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கை விட வடமத்திய மாகாணத்தில் அதிகமான படையினர் உள்ளனர். இவ்வாறான நிலையில் தமது தேர்தல் பிரசாரத்திற்கு இராணுவத்தை பயன்படுத்தவும், சேறு பூசவும் முயல் கின்றனர். அரசியலுக்காக யாழ். குடா நாட்டிலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்றுமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்ற போது குடாநாட்டு மக்கள் தமது பாதுகாப்பு அச்சுறுத்தல், குற்றச் செயல்களை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இராணுவம் இருக்க வேண்டும் என்று எம்மிடம் தொடர்ச்சியாக கேட்டுக்கொள்கின்றனர் என்றார். வடக்கிலுள்ள இராணுவ உளவு பிரிவு தொடர்பாக இன்னுமொரு வார இறுதி தமிழ் பத்திரிகையில் வெளியான செய்தியின் உண்மை நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்த யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க,

விசாரணை என்ற பெயரில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்! என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு வெறும் அப்பட்டமான பொய்ப்பிரசார மாகும். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அந்தக் கூற்றை மிகவும் பொறுப்புடன் முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வு பிரிவினரை அரசியல் செயற்பாடுகளில் அரசாங்கமோ இராணுவமோ ஈடுபடுத்தியதில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பிலேயே இராணுவம், புலனாய்வு பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சிக்குள் தற்போது நிலவும் உட்பூசலை மறைக்க இராணுவத்தை பயன்படுத்தி பிரசாரத்தை தேடுகிறது என்றார்.

வலிகாமத்தில் ஆக்கிரமித்துள்ள 6,500 ஏக்கர் நிலத்தை இராணுவம் விடுவிக்காதது ஏன்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளிக்கையில்,

வலிகாமம் பிரதேசத்தில் 13,600 ஏக்கர் நிலப்பரப்பு ஏற்கனவே இருந்தது. தற் போது அது உரிமையாளர்களிடம், பொதுமக்களிடமும் படிப்படியாக கைய ளிக்கப்பட்டு மிகவும் குறைவான அளவே தற்போது உள்ளது.

இவ்வாறு உள்ள காணிகளில் 50 வீத மானவை அரசுக்குச் சொந்தமானவை மிகுதி 50 வீதமானவை தனியாருக்கு சொந்தமானதாகும். அரசுக்கு சொந்தமான 50 வீதமான காணியிலேயே இராணுவ, விமானப்படை, கடற்படை முகாம்கள், சீமெந்து தொழிற்சாலை, ஆசிரியர் கலாசாலை போன்றவை உள்ளடங்கியுள்ளன. மிகுதி 50 வீத தனியார் காணிகளுக்கு சந்தையிலுள்ள விலைக்கு கொள்வனவு செய்து அதற்கு தேவையான நஷ்டஈட்டுத் தொகையை கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார் த்தை நடத்தப்பட்டு இணக்கப்பாட்டுடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் காங்கேசன் துறை துறைமுகம் போன்றவற்றை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்தல், விஸ்தரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கே இந்தக் காணி பயன்படுத்தப்படவுள்ளது என்றார். வட மாகாண சபைத் தேர்தல், பொது நலவாய நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை போன்றவர்களின் வருகை அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டே தற்போது காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என கூறப்படுவது முற்றிலும் தவறானதாகும்.

ஏனெனில் 2011 ஆம் ஆண்டு ஞானம் ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்கள் பொதுமக்களிடமும், உரிமையாளர்களிடமும் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்பட முன்னரே காணிகள் விடுவிக்கப்பட்டது.

அப்போது நவநீதம்பிள்ளை வரவும் இல்லை. எவரும் அழுத்தம் கொடுக்கவு மில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு எப்போது எதனை கொடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி அவர்களே தீர்மானிப் பார் என்றும் யாழ். பாதுகாப்புப் படை களின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹதுருசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Posts