யாழ் குடாநாட்டில் 2 வாரங்களில் 22 பேர் கைது!

யாழ் குடாநாட்டில் கடந்த 2 வாரங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று மட்டும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் கச்சேரியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்படி, மானிப்பாயில் வாகனம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 6 பேரும், 2 மோட்டார் சைக்கிள்களுடன் இருவரும், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேரில் 6 பேர் இளைஞர்கள் என்றும், அவர்களில் சிலர் யாழில் இயங்கிவரும் முக்கிய குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிராம சேகவர் வீட்டில் சென்று தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், விரைவில் முக்கிய சந்தேகநபரை கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Related Posts