யாழ்.குடத்தனை வாள் வெட்டு – சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரண்!

யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை அக்கிராமத்தை சேர்ந்த தர்சன் எனும் நபரே மேற்கொண்டார் என ஊரவர்கள் காவற்துறையினரிடம் தெரிவித்து இருந்தனர்.

அந்நிலையில் குறித்த நபரை காவற்துறையினர் கைது செய்வதற்காக தேடுதல் நடடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சமயம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தேக நபர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

காவல் நிலையத்தில் சரணடைந்த குறித்த நபரிடம் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts