யாழ்-கிளிநொச்சி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 27கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன.

இதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும்.

ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம் ஆண்டு முதல் அமுலாகிறது.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டங்களின் மூலம் குடா நாட்டில் நகர பிரதேசங்களின் சுகாதாரமும் ஆளணி வளமும் அபிவிருத்தி செய்யப்படும்.

இதன் கீழ் 308 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகளும் 308 கிலோ மீற்றர் நீளமான தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதற்கான மொத்த முதலீடு 90 கோடி 60 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம் தற்சமயம் அமுலாகிறது.

Related Posts