யாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பு!!

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் இக்குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய முனையமொன்றை அமைக்கும் பொருட்டு கௌரவ அமைச்சரால் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள முனையத்திற்கு 300, 400 தொன் நிறைக் கொண்ட கப்பல்களே வருகைத்தருகின்றன.பெரும் கொள்ளலவைக் கொண்ட கப்பல்களை துறைமுகத்திற்குள் ஈர்க்கும் பொருட்டு புதிய முனையமொன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.இப்புதிய முனையத்தின் ஆழம் 07 மீட்டர்களாகும். இந்நடவடிக்கையூடாக துறைமுகத்தின் செயற்பாடுகளை அபிவிருத்திச் செய்ய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.பழைய முனையத்தை சீர்செய்தல் , புதிய ஆழமான ஜெட்டியொன்றை நிர்மாணித்தல், அலைதாங்கியை விஸ்தரித்தல் ஆகிய துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் விரிவாக்கல் செயற்பாடுகளின் பொருட்டு காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் முதலாம் கட்டமாக 15 ஏக்கர் காணியும், இரண்டாம் கட்டமாக 35 ஏக்கர் காணியும் கையகப்படுத்தப்படவுள்ளது. இவ்வனைத்து செயற்பாடுகளையும் துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் மேலும் கூறினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றல் மற்றும் யுத்தத்தின் பொழுது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

Related Posts