யாழ் கலட்டிப் பிள்ளையாா் தோ் சரிந்து வீழ்தது!

யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1

கலட்டி பிள்ளையார் ஆலயத்தின தேர் இன்று முற்பகல் ஆலய பின் வீதியில் சரிந்து விழுந்தது. இதில் ஆலய குருக்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2

மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவருவது தேரின் பின் இரண்டு சில்லுகளை இணைக்கும் அச்சு சரியாக பொருந்தாமையினாலே இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

3

இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இன்று வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts