யாழ்.கந்தப்ப சேகரம் வீதி அகலிப்பு தீர்மானம் வர்த்தகர்களால் ஏற்பு

road_worksயாழ். வைத்தியசாலை வீதிக்கு சமாந்தரமாக உள்ள கந்தப்ப சேகரம் வீதியை அகலிப்பது தொடர்பான கூட்டம் இன்று யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்.வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குறித்த வீதியின் அருகில் உள்ள வீடு, காணி மற்றும் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்.மாநகர சபை யாழ்.வணிகர் கழகத்தின் ஊடாக உரிமையாளர்களிடம் வீதியின் மையப்பகுதியில் இருந்து 18 அடி அகலத்தினை வழங்கி ஆதரவு தருமாறு கேட்கப்பட்டது,எனினும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மையப்பகுதியில் இருந்து 15 அடி வரையான அளவு காணியினை தரமுடியும் என்று சம்மதம் தெரிவித்தனர்.

அவ்வீதியிலுள்ள 90 வீதமான காணி உரிமையாளர்கள் ஒப்புதலளித்த இத்தீர்மானத்தில், வீதி அகழிப்பு மட்டுமல்லாமல் கழிவுநீர் வடிகால், வீதிக்கு குறுக்கான பாலம் ஆகியன புனரமைப்புச் செய்யப்படுவதுடன், வீதிக்கும் காப்பற் இடப்படவுள்ளது.

Related Posts