யாழ். கடற்றொழில் திணைக்களத்திற்கு படகுகளும் இயந்திரங்களும் கையளிப்பு

fishing-boat_CIயாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு 15 படகுகளும் 15 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டிற்கென கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சால் ஒதுக்கப்பட்ட 26 மில்லியன் ரூபா நிதியில் யாழ். மாவட்டத்தில் கடற்கரை பிரதேசங்களில் பொதுமண்டபங்கள் மற்றும் சந்தைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கான 8 கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. எஞ்சிய நிதியிலிருந்தே படகுகளும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள 15 படகுகளும்; 15 இயந்திரங்களும்; மீள்குடியமர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts