யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது.
ஊறணி பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை.
இதனையடுத்து தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தைப்பொங்கல் தினத்தன்று ஊறணி பகுதியில் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கி 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறீமோகனன் ஆகியோர் தலைமையில் ஊறணி பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதியை மக்களிடம் மீள கையளித்துள்ளனர்.