யாழ். உள்ளூராட்சி திணைக்களத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ். மாவட்ட உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு எதிராக காணி, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு, கட்டிட அமைப்புக்கான அனுமதி கோரல், ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக தினமும் பல முறைப்பாடுகள் கிடைப்பதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

என்றும் இல்லாதவாறு உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றை விசாரணைக்காக அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி திணைக்களங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts