யாழ். இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு!

யாழ்.மாவட்டத்தின் தனியார் துறையில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்ள யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் யாழ். வணிகர் கழகத்திடம் விண்ணப்பிக்க முடியும் என வணிகர் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

தனியார் துறைகளில் கணனி இயக்குநர், விற்பனையாளர்கள், வெளிக்கள அலுவலர், கணக்குப் பதிவாளர்கள், லிகிதர்கள், விற்பனை பிரதிநிதிகள், சாரதிகள் பதவிகளுக்கு இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts