யாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை!

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசித்திரமான முறையில் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் நேற்று (26) பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமான பிறேம் (ஜோய்) என்ற இளைஞனே இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக வெட்டுவதற்கு காலிக்குச் சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts