யாழ் இந்து மாணவன் அகில இலங்கை மட்டத்தில் தமிழ் மாணவர்களிடையே முதல் இடம்!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். Exams என டைப் செய்து இடைவௌி விட்டு சுட்டெண்ணை பதிவு செய்து 7777 என்ற என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

வௌியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின்படி, முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்தியாலயத்தின் அனுகி சமத்கா பெஸ்குவேல் என்ற மாணவி பெற்றுள்ளார்.

ஏனைய இடங்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு

2. கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையின் எஸ்.எம்.முணசிங்க

3. கொழும்பு ஆனந்த கல்லூரியின் ஆர்.எம்.சுகத் ரவீந்து சன்வர

3. மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் திமுத் ஓஷதி மிரிஸ்ஸகே ஆகியோர் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

4. கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தின் எச்.பி.பவசரா மலிதி குமாரி ஹேரத்

இந்தநிலையில் 5 வது இடத்தை மூன்று மாணவர்கள் பகிரந்து கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5. கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் டி.எம்.ரனுமி தியரணி நாணயக்கார.

5. காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் ஏ.தம்சரா மெதாவி.

5. யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியின் ஏ.அபிநந்தன்.

இதுதவிர, இந்தமுறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றவர்கள் வரிசையில் 6 வது இடத்தை 2 மாணவிகள் பெற்றுள்ளனர்.

6. காலி சவுத்லன்ட் வித்தியாலயத்தின் கே.ஜி.ஜி.ஈ.ரன்தினி டி சில்வா.

6. மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி.

இவற்றை தவிர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும்.

இதேவேளையில் அகில இலங்கை மட்டத்தில் 05ம் இடத்தை பெற்றுள்ள யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் மாணவன் ஏ.அபினந்தன் தமிழ் மாணவர்களில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை கூறத்தக்கது.

Related Posts