யாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ‘2005 பழைய மாணவர்கள்’ அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.

jaffna-hindu-old-boy-2005

இந்த அணியின் முதல் நடவடிக்கையாக முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நேர ஆரோக்கிய உணவு வழங்குவதற்கான திட்டம் ஆர்ம்பிக்கப்பட்டது.

இதில் 2005 பழைய மாணவர்களின் பிறந்த தினம் வருகின்ற மாதத்தில் ஒவ்வொருவராக பொறுப்பேற்று அத்திட்டம் நடைபெற்று வருகின்றது.

இரண்டாம் கட்ட நடவடிக்கையாக கிளிநொச்சி பூநகரி சிறீவிக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தாய் மற்றும் தந்தையை இழந்த இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி, பத்து மாணவர்களுக்கு கல்வி பயிலுவதற்கான ஊக்குவிப்பு பணத்தொகை ஆகியன வழங்கப்பட்டன.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 2005 பழைய மாணவர்களால் கல்லூரியின் 2012 பரிசளிப்பு விழாவின் போது மூன்று லட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts