யாழ் இந்து – கொழும்பு ஆனந்தா கல்லூரிகளின் துடுப்பாட்டப் போட்டியில் ஆளுநர்

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான வீ.ரி.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கடந்த சனிக்கிழமை பார்வையிட்டார்.

இதன்போது இரண்டு கல்லூரி அணித்தலைவர்களுடனும் ஆளுநர் கைலாகு கொடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். அத்துடன் இரண்டு பாடசாலை அதிபர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார்.

இதன்போது யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தினை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அதற்கு அயலில் உள்ள காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கல்லூரிச் சமூகம் ஆளுநருடன் கலந்துரையாடியது. அதற்கு அமைவாக குறித்த காணிகளை ஆளுநர் பார்வையிட்டார்.

கடந்த 26,27 ஏப்பிரல் 2013 ஆகிய நாட்களில் இடம்பெற்ற இப்போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி 8 இலக்குகளால் வெற்றி பெற்றது. முதலாவது இனிங்ஸில் ஆனந்தாக் கல்லூரி 208 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. தொடரந்து யாழ் இந்துக்கல்லூரி 206 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இரண்டாவது இனிங்ஸில் ஆனந்தாக் கல்லூரி 100 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. 103 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பாடிய யாழ் இந்துக்கல்லூரி 2 இலக்குகளை இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

jaffnahindu-anantha-bigmatch

Related Posts