யாழ்.இந்து – கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் போட்டி

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி – கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 4ஆவது வருட கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை (24) நாளை சனிக்கிழமை (25) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சிவகுருநாதன் கிண்ணத்துக்காக இரண்டு நாட்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுகின்றது.

இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

anantha-cricket0team

hindu-cricket-team

Related Posts