யாழ்.இந்து கல்லூரி அதிபர் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதிக்கு 50 ஆயிரம் ரூபா கையூட்டுப் பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் சதா நிமலன் கைது செய்யப்பட்டுள்ளார்

Related Posts