யாழ் இந்துவில் நாளை ஆசிரியர் மதிப்பளிப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்  நாளை ஆசிரியர் மதிப்பளிப்பு  நிகழ்வு இடம்பெறஉள்ளது. 1996 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களிால் இவ்விழா  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் 1988 தொடக்கம் 1996 வரையில்  கல்விகற்று 1996 உயர்தரப்பிரிவின் ஊடாக வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்களால் கௌரவிக்கப்படுகின்றனர். நாளை நண்பகல் சபாலிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறுகின்றதது. நிகழ்வுக்காக பல பழையமாணவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் ஒன்று கூடுகின்றனர்.

மேற்படி பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு உதவவென ஒரு நிதியத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்களால் இயன்ற சிறு சிறு வேலைத்திட்டங்களை பொறுப்பெடுக்கவும் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Related Posts