யாழ் இந்துவில் கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டிகள்

Matrix Homes அனுசரணையுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் கல்லூரின் 125ம் ஆண்டை முன்னிட்டு நாடாத்தப்படுகின்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று (21-03-2015) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வெகு விமர்சையாக யாழ் இந்துக் கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெண்களுக்கான இராமநான் கல்லூரினை எதிர்த்து திருக்கன்னியர் மட கல்லூரி அணி மோதவுள்ளது.

hindu-basket-ball

5.30 மணியளவில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான போட்டியில் யாழ் இந்துக்கல்லூரியினை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல்ஸ் சர்வதேசப் பாடசாலை அணி மோதவுள்ளது. இப்போட்டிகளுக்கு கூடைப்பந்தாட்ட ஆர்வலர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்ப்பாட்டாளர்கள்

Related Posts