யாழ்.இந்துக் கல்லுாரி மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எனினும் தெய்வாதீனமாக அருகில் இருந்த மின் வயரில் சிக்குண்டதன் காரணமாக சிறிது தாமதித்து கீழ் விழுந்துள்ளார்.

உடனடியாக குறித்த மாணவன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் இந்த செயலுக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Posts