மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ். இந்து கல்லூரியும் 18 மாணவர்கள் 3A சித்திகளை பெற்று யாழ். மாவட்டத்தில் சமநிலையில் இருந்தன.
இந்த நிலையில் அரசியல் விஞ்ஞானம் பாடத்தில் B நிலை சித்திபெற்ற இந்துக்கல்லூரி மாணவன் ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ மீள் திருத்தம் மூலம் A நிலை சித்தியை பெற்று 3A சித்தியடைந்துள்ளர்.
இதன் மூலம் மாவட்ட மட்டத்தில் சமநிலையில் இருந்த சாதனையை இந்துக்கல்லூரி தகர்த்துள்ளதுடன் குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் 32ஆவது இடத்தில் இருந்து முன்னேறி 22 ஆவது நிலையை பெற்றுள்ளான்.
மேலும் இம் மாணவன் இந்துக்கல்லுரியின் விவாத அணியின் தலைவராக இருந்து அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.