தொடர்ந்து 3 வருடங்களாக யாழ் இந்துக்கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப்பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்க்கட்டமாக கடந்த மாசி (09.02.2016)மாதம் தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள் மொத்தமாக (19) பத்தொன்பது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.
அதன் அடுத்த கட்டமாக கடந்த 13ம் திகதி அம்பலவன்பொக்கணை அ.த.க பாடசாலையின் ஒரு மாணவனுக்கும் கொக்கிளாய் அ.த.க.பாடசாலையின் ஒன்பது மாணவர்களுக்குமாக மொத்தம் பத்து(10) துவிச்சக்கர வண்டிகளும் கொக்கிளாய் அ.த.க பாடசாலைக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.