Ad Widget

யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும் நடந்தேறியது

nava0223இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. முதல் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் இடம்பெற்று 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. இந் நிகழ்வில் அதிபர் உரையும் மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து மாமன்றத்தினால் ”நவமலர்” எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வினை தொடர்ந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஏட்டினை தொடக்கி வைத்தார்கள்.

இதன் பின்னர் வைரவப் பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.

மேலதிக விபரங்கள் படங்களுக்கு http://www.jhc.lk

Related Posts