யாழ். ஆரியகுளத்துநீர் சிவப்பாக மாறியமை பாரிய பிரச்சினை இல்லையாம்!

யாழ். ஆரியகுளத்து நீர் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தமை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை எனவும் அவ்வாறு முக்கிய பிரச்சினையாக இருந்தால் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். ஆரியகுளம் நீர் சிவப்பாக மாறியமை தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான தகவல்களும் வரவில்லை. எமக்கும் இது பற்றி தெரியாது. அத்துடன் யாழ். ஆரியகுளத்து நீர் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தமை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை. அவ்வாறு முக்கிய பிரச்சினையாக இருந்தால் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

இவ் ஆரியகுளத்து நீர் மாற்றம் அடைந்ததைவிட பாரிய பிரச்சினைகள் யாழ். மாவட்டத்தில் உள்ளன. முதலில் அவற்றையே தீர்க்க வேண்டும். அதைவிட நிறம் மாற்றம் அடைந்த நீரினை ஆய்வு செய்வ்தற்கான ஆய்வுகூட வசதிகள் யாழ். மாவட்டத்தில் இல்லை. கொழும்புக்கு சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts