யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகள்

யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் இன்றுடன் (03) ஆரம்பமாகின்றது. இன்று முதலாவது போட்டியாக கரம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

karam-caram-sports-1

பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ம் மற்றும் 8ம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ் இராணுவ நிதிமன்ற மைதானத்திலும்,உதை பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ம் திகதிகளில் யாழ் குருநகர் பாடுமின் விளையாட்டு மைதானத்திலும் பாசையூர் சென் அன்ரனி மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் எதிர்வரும் 22ம் திகதி நாயன்மார்க்கட்டு பாரதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் கயிறு இழுத்தல் போட்டி எதிர்வரும் 24ம் திகதி யாழ் ஸ்ரான்லி கல்லூரியில்

மேலும் சதுரங்கப்போட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளதுடன் துடுப்பாட்டம் வரும் மாதம்(அக்டோபர்) 1ம் 2ம் திகதிகளில் மூன்று பிரிவுகளாக GPS மைதானம், யாழ் ஸ்ரான்லி கல்லூரி மைதானம் மற்றும் அரியாலை காசிப்பிள்ளை சனசமூக நிலைய மைதானங்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts