யாழ் முஸ்லீம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு யாழ் முஹம்மதியா ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இதன் போது மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும்,தற்போது சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்து கூறினர்.
இதன் போது பதிலளித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் முஸ்லீம் உறவின் முக்கியத்துவம்,மீள்குடிறேற்ற விடயத்தில் தமிழ், முஸ்லீம்களுக்கிடையிலான பிரச்சினைகளை களைவதற்கு முன்னின்று செயற்பட தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.