யாழ்ப்பாண மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.சிங்களமயம் தொடர்கிறது – நாம் இலங்கையர் அமைப்பு

jaffna-universityயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் பொலிஸாராலும் புலனாய்வாளராலும் கண்காணிக்கப்படுகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது

அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் பகுதியில் பொலிஸார் சாதாரண உடைகளில் மாணவர்கள் மீது கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்று நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அவர்களின் வீடுகளுக்கு சென்று படையினர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இது முழுமையாக யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆளுகை மேற்கொள்ளப்படுவதை காட்டுகிறது என்று பிரேமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறத்தில் பொதுமக்கள் தாமே முன்வந்து போராட்டங்களில் ஈடுபடாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் சிங்களமயமாக்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக கிளிநொச்சியில் உள்ள வட்டுக்கோடை என்ற இடம் வடுகோடிபிட்டிய என்று சிங்கள பெயரால் மாற்றப்பட்டுள்ளதாகவும் உதுல் பிரேமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் உதுல் பிரேமரட்னவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவத்தரப்பு மறுத்துள்ளது.

Related Posts