யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் கைது

கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர்கள் நடத்திய தேடுதலின் போது இரு இளைஞர்கள் நுகர்விற்காக கஞ்சா கலந்த மாவாவை கொள்வனவு செய்த போது கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 84 கிராம் கஞ்சா கலந்த மாவாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் யாழ் நகரப்பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts