யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட போராட்டமானது யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக வந்து பிரதான வாயிலில் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெற்றது.

Related Posts